Me... We... Us... for peace and love ...!!!

Me... We... Us... for peace and love ...!!!
Peace and love is all this world aches for. so, let us set on a mission to share some.. :)

Monday, July 16, 2012

இசைக்கு இசைந்துகொடு..!

இசைப்பதும் இசைகப்படுவதும்
இசைகேட்க இசைவோருகே பயன் - ஏனெனில்
இசைகேட்க இசையா மனம்
இசையின்றி இசையாமல் இருக்கும்
இரும்புக்கு நேர் ..!

Monday, January 30, 2012

மானுடம் எங்கே … ?!

உடல் எங்கும் பிழம்பாய் கொதிக்கின்றாள் அவள் …!
உயிரூட்டும் எரிப்பிழம்பு உள்ளிருந்து சுட,
புறமோ மானிடன் துளை இட்டு சுடுகின்றான் …!
மானிடன் வாழ இடம் தந்தவள் வாழ மானிடன் மறுக்கின்றான் …!
வரம் தந்தவன் தலையில் கை … ” – சரியாகத்தான் பொருந்துகிறது …!
பூமியின் மேல் நாம் … !
                                                    

Monday, January 23, 2012

தாலாட்டு..!!

தாய் அவள் சேலை தனில் தூளி கட்டி தலட்டியது ஒருகாலம்- இன்றோ
இரும்பும் கம்பளியும்சேர் கலவையாய் தார் ரோட்டில் தவழ்கிறது தொட்டில்..!
தாய் அவளே சேலை அணியா காலத்தில், சுடிதார் முந்தியில் தொட்டில் காட்ட
தனித் திறமை தேவை தான்..!!
மழை பெய்யும் நேரம், நாயினைக் கூட தோள்தனில் சுமக்கின்றாள் - பாவம்
பிள்ளயை ஆய சுமக்கின்றாள்..!!
எனை மறந்தான் ஏன் மறந்தான் என் மைந்தன் என இனியேனும்
தனிமாரம் ஆவதற்குள் இனியேனும் மனம் மாறு தாய்

இறைவனுக்கு நன்றி

இன்னார் இவர் என காட்டுவள் தாய்…!
இன்னது இது என உணர்த்துவன் தந்தை…!
மறு தாய் தந்தை என வாழ்பவர் உடன்பிறப்பு..!
புது உலகிது என உணர்த்துவன் நண்பன்…!
அறிவு புகட்டி பசி தீர்ப்போன் ஆசான்…!
இவை யாவும் நமக்கு அருள்வோண் இறைவன்…!
ஆதலால் அவனுக்கு நன்றி…!

நீயும் நானும் இறைவனே…!!

அன்பும் பாசமுமே எல்லா உயிரயும் உயிர்ப்பிப்பதுவாம்..!
உயிரினை உயிர்ப்பிப்பது இறைவன்- அப்படியாயின்
நீயும் நானும் இருப்பதுவும் உயிர்ப்பதுவும் அன்பினால் தானே…!
ஆக நீயும் நானும் உயிர்த்தாலிலும் உயிர்ப்பிப்பதிலும் உயிர்பதால்..!
உயிர்த்தவர் யாவரும் இறைவனே… !!

Tuesday, May 17, 2011

நினைவில் .. கனவில் தேவதை வந்தாள்..!!

நள்ளிரவு நேரம்...
நடுநிசியில், நிலவொளியில் நாம் நனைந்திருந்த நேரம்...
நானல் அது ஓடுதல் போல்,
நன்நெற்றியில் திலகமிட்டவள் நாணி என் முன் பாவி நிற்க...
நயந்து அவள் குரல் கேட்க நாள் முழுதும் காக்கவைத்த தேவதை, அவள், சித்திரைப் பௌர்னமியினும் உன்னதமாய் ஒளிர்ந்திட்டாள்... என் நினைவில்...!!

தொடரும் எண்ணங்களின் ஓட்டம் ...

இரயில்லோசைக் கேட்கும் நேரம்...
அதர்காக நாற்பத்தைந்து நிமிடம் காத்திருக்க வேன்டுமாம் ...
இடைப்பட்ட இவ்வேளையில் என் காதலியின் இன்குரலோசைக் கேட்க ஆவல் கொன்டே,
சட்டைப் பையில் பத்திரமாய் வைய்த்திருந்த
அவள் குரலிசைத் தொகுப்பை
தொடர்வன்டியாய் அவள் நினைவுகளின் திசைத்தேடி ஓடவிட்டேன் ...
அவள் குரல்வழி போன வன்டி அவள் நினைவதனைச் சேறும் நேரம்... தாமதமாய் வந்த விரைவு இரயிலவன்டி அதன் இறுக்கையில் சாய்தபடி தொடர்ந்தோடவிட்டேன் என் என்னங்களின் தொடர்வன்டியை . . .